சக சிப்பாயை சுட்டுக்கொன்று : தன்னைத்தானே சுட்டுக்கொன்றார் சிப்பாய்.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியோரமாக உள்ள இராணுவ பாதுகாப்புச் சோதனைச் சாவடியொன்றில் இன்று வெள்ளிக் கிழமை பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த சிப்பாய் ஒருவர் சக சிப்பாயை சுட்டுக்கொன்றுவிட்டு தன்னை த்தானே சுட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இரு வீரர்களிடையே காணப்பட்ட பிரத்தியேக பிணக்கு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சம்வப இடத்திற்கு சென்ற யாழ்.நீதிமன்ற நீதிவான் மா.கணேசாராச மற்றும் சட்ட வைத்திய அதிகாரி ஆயோர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்குமாறு நீதிவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment