தியதலாவ பகுதியில் ரயிலின் முன்னால் பாய்ந்து பாடசாலை மாவணர்கள் இருவர் தற்கொலை
பதுளை - தியதலாவ பகுதியில் ரயிலின் முன்னால் பாய்ந்து பாடசாலை மாவணர்கள் இருவர் தற்கொலை செய்துக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றைய தினம் (27.05.2012) இடம்பெற்றுள்ளது.
தியதலாவை பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவனும் 16 வயதான மாணவியுமே கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு ரயிலிலே பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
காதல் விவகாரம் காரணமாக இவர்கள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கும் தியதலாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment