சரத்பொன்சேகா இன்று விடுதலையாகலாம் – டிரான் அலஸ்
இன்றைய தினம் எந்த நேரத்திலும் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பை பெற்று விடுதலையாவார் என ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ஊடமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா இன்று ஜனாதிபதியின் மன்னிப்பை பெற்று விடுதலையாவார் பலர் எதிர்பார்த்திருந்தனர்.
ராணுவ வெற்றிவிழா நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதியும் இது தொடர்பில் எந்த வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
இந்நிலையிலேயே, இன்றைய தினம் எந்த நேரத்திலும் முன்னாள் ராணுவத் தளபதி சரத்பொன்சேகா ஜனாதிபதி மன்னிப்பை பெற்று விடுதலையாவார் என பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment