Tuesday, May 22, 2012

புதையல் தோண்டல்கள் அதிகரித்துள்ளதால் புராதன பிரதேசங்களை பாதுகாக்க விசேட திட்டம்

புராதன பெருமைவாய்ந்த பிரதேசங் களின் பாதுகாப்பிற்காக பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இப்பிர தேசங்களின் பாதுகாப்பிற்காக சிவில் பாதுகாப்பு படை அதிகாரிகளை ஈடு படுத்து வதற்கு தீர்மானித்துள்ளதாகவும், தேசிய மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அண்மைக் காலங்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதையல்கள் தோண்டப்படும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவ்வாறு புதையல் தோண்டும் புராதன பழமை வாய்ந்த பிரதேசங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதே, இத்திட்டத்தின் நோக்கமென தேசிய மரபுரிமைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் குறித்த சிவில் பாதுகாப்பு படையணியின் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தேசிய மரபுரிமைகள் அமைச்சினூடாக வழங்குவதற்கு தீர்மானிக்கப் பட்டுள்ளதாகவும், அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment