இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தோரின் கைப்பெம்மையாக பொன்சேகா மாறிவிட்டார்
அவுஸ்திரேலியாவில் கடந்த 4 மாதாலமாக சிகிச்சை பெற்று நாடு திரும்பிய ஊடக தகவல் துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொழும்பிலுள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார்.
அதில் கருத்து தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல்ல ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மன்னிப்பில் விடுதலையாகிய சரத் பொன்சேகா பத்திரிகையொன்றுக்கு தெரிவித்திருக்கும் கருத்தானது இலங்கை விடயத்தில் வெளிநாடுகளின் தலையீடுகளை அவர் வலியுறுத்துவதாக இருக்கின்றது என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய தெரிவித்துள்ளார்.
வடபகுதியில் சிவில் நிர்வாகத்தில் இராணுவத்தினர் தலையிடுவதாக சரத் பொன்சேகா பத்திரிகையொன்றுக்கு தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் போதே கெஹலிய ரம்புக்வெல்ல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையாகி சுதந்திரமாக வெளியில் நடமாடிக் கொண்டிருக்கும் சரத் பொன்சேகா அவருடைய உண்மை நிலைப்பாட்டை மறந்து ஜனாதிபதி வழங்கிய சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்கிறார். அத்துடன் இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் கைப்பெம்மையாக சரத் பொன்சேகா மாறிவிட்டார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சரத் பொன்சேகா இலங்கையின் உள்விவகாரங்ளில் வெளிநாட்வர்களை தலையிடுமாறு அழைப்பது பாரதூரமான செயல் என தெரிவித்த அமைச்சர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கைக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு ஒரு தோல்வி அல்ல என்றும், ராஜதந்திர மட்டத்தில் அவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவது சாதாரன விடயம் எனவும் தெரிவித்தார்.
மேலும இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து மீட்ட ஜனாதிபதியை ஒரு மாவீரர் என்றே இன்நாட்டு மக்கள் கருதுகின்றனர் என தெரிவித்த கெஹலிய ரம்புக்வெல்ல ஜெனீவா தீர்மானம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதற்கு ஏற்புடைய ஒரு நல்ல முடிவை எடுப்பேன் என்று தெரிவித்திருக்கும் கருத்தை இந்த நாட்டிலுள்ள சகல மக்களும் முழுமையாக நம்புகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment