சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகம் - அனோமா
தற்போது நவலோக்க தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் சரத்பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்படாத அளவு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக சரத்பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நவலோக்க வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் தனது கணவனுக்கு அதிகளவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அவரை சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
15 நிமிடங்களே தனக்கு கணவரை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்னும் எவ்வளவு தினங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என்பது வைத்தியர்களின் முடிவிலேயே உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment