மட்டக்களப்பில் எதிர்க்கட்சித் தலைவர் ரணிலின் கூட்ட மண்டபத்தில் கைக்குண்டு.
நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அங்குள்ள பிரமுகர்களுடன் கூட்டமொன்றில் கலந்துகொள்ளவிருந்தார். இந்தக் கூட்டம் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு, திருகோணமலை வீதியில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியொன்றின் ஜன்னலருகிலிருந்து கைக்குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உடனடியாக இந்தக் கூட்டம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது எனினும் பின்னர் இதே விருந்தினர் விடுதியின் மற்றொரு மண்டபத்தில் கூட்டம் இடம்பெற்றது.
எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டம் இடம்பெறவிருந்த இம்மண்டபத்தை முன்ன்னர் பாதுகாப்புப் படையினரும் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை நடத்தியபோது இந்தக் கைக்குண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. எனினும், ரணில் விக்ரமசிங்க மண்டபத்திற்கு வருவதற்கு சற்று முன்னரே கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இதேநேரம் இந்த நாட்டு உழைக்கும் மக்களை அவமதித்தமை சம்பந்தமாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவும் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய தொழிலாளர் போராட்ட மையத்தின் செயலாளர் லால் பெரேரா தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளைப் பற்றி தனக்கு நல்ல அறிவுண்டு என்று கூறும் விக்கிரமசிங்கா மற்றும் அவரின் பொதுச் செயலாளர் சர்வதேச தொழிற் சட்டம் மற்றும் உரிமை தொடர்பாக ஒன்றும் தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற எதிர்க் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் சர்வ சர்வதேச தொழிலாளர் பேரவையின் 189-ம் இலக்க பிரிவுக்கு மாறான கருத்தை 4 து தீர்மானம் கொண்டிருக்கிறது என்று பெரேரா கூறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment