ஐஸ் கிரீம் என மருந்துவகையான கிரீமை உட்கொண்டு பாலகன் மரணம்.
யாழ்ப்பாணம் தொண்டமனாறு கெருடாவில் பிரதேசத்தில் மூன்று வயதுடைய பாலகன் ஐஸ்கிறீம் எனக் கருதி கால் வலிக்குப் பூசும்சிவப்பு நிற கிறீம் வகை மருந்தை உட்கொண்டு மரணமடைந்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாய் பாலகனை அறையில் விட்டுவிட்டு வீட்டின் முன்பக்கம் சென்றுவிட்டு, பின்பு வந்து பார்த்தபோது மேசையில் இருந்த கீரிம் வகையினை குழந்தை உட்கொண்டுள்ளதாக விசாரணையின் போது குழந்தையின் பெற்றோர் பொலிஸாருக்கு தெரிவித்தனர். மூன்று வயதுடைய ராஜசேகரம் ரோசான் என்பதே இவ்வாறு மரணமடைந்த குழந்தை ஆகும்.
மேலும் இந்த மரணம் குறித்து வல்வெட்டித் துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment