புலி உறுப்பினர்கள் இருவரை கனடா நாடு கடத்துகின்றது.
அகதிகளாக கனடாவிற்குள் கப்பல் மூலம் பிரவேசித்த எல்ரிரிஈ உறுப்பினர்களில் மேலும் இருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு கனடா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 2010 ஆம் ஆண்டு எம்.வி.சன்.சீ கப்பலில் அகதிகளாக 492 எல்ரிரிஈ உறுப்பினர்கள் கனடாவிற்கு சட்டவிரோதமாக பிரவேசித்தனர். அவர்களில் இருவரை இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு கனடா புலம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் விவகாரங்களுக்கு பொறுப்பான சபை தீர்மானித்துள்ளது.
நாடு கடத்தப்படவுள்ள இருவரில் ஒருவர் எல்ரிரிஈ உறுப்பினர் என்பது நிருபணமாகியுள்ளதன் காரணமாக நாடு கடத்தப்படவுள்ளார். மற்றைய நபர் சட்டவிரோதமாக கனடாவிற்கு பிரவேசித்தமை தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து அங்கிருந்து வெளியேற்றப்படவுள்ளார். கனடாவிற்கு சன்சீ கப்பல் மூலம் பிரவேசித்த 492 பேரில் இதுவரை 19 பேரை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும் தண்டனை விதிப்பதற்கு கனடா அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment