ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூரைத் தோற்கடித்து ஜனாதிபதி மூன்றாவதாக வந்தார். அமெரிக்காவின் மக்கள் கருத்தறியும் அமைப்பான Gallup நடாத்திய ஆசியா தொடர்பான புதிய மக்கள் கருத்துக் கணிப்பில், 91% இலங்கை மக்கள் ஜனாதிபதி
மகிந்த ராஜபக்ஷவின் வேலைத் திட்டங்களை ஆதரிப்பதாக தெரிய வந்துள்ளது. 6% மானோர் ஆதரிக்கவில்லையென்றும், 3% மானோர் ஆதரவோ எதிர்ப்போ காட்டவில்லையென்றும் அவ்வமைப்பின் இணையதளம் கூறுகின்றது.
இக்கருத்துக் கணிப்பில் முதலாம் இடம் பெற்றவர் லாவோசின் சோம்மாலி செயிக்னசன், இரண்டாம் இடம் கம்போடியாவின் ஹுன்சென் ஆவார். ஜப்பான், இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றால் இந்த இடங்களைப் பிடிக்க இயலவில்லை.
No comments:
Post a Comment