பாரம்பரிய கைத் தொழிற்துறையை ஊக்குவிக்க நடவடிக்கை
குருநாகல் மாவட்டத்தில் பழைமையான பாரம்பரிய கைத் தொழில் செய்கையாளர்களை ஊக்குவிக்கும் வேலைத் திட்டமொன்றை இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை ஆரம்பித்துள்ளதாக குருநாகல் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்திச் சபை உதவி பணிப்பாளர் எம். டி. ரத்நாயக தெரிவித்தார்.
மெத்தெபொலவில் பனை கைத்தொழில் ஈடுபடுவோரும், நாவானவில் மரமுந்திரிகை உற்பத்தி கைத் தொழில் ஈடுபடுவோரும் , கொட்டவெஹெர குருபொகுணவில் உற்பத்தி தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோரும், மாஸ்பொதவில் கைப்பேணி பொருள் உற்பத்திகளில் ஈடுபடுவோரும் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இன்னும் பழைய முறையில் நடத்தப்படும் இந்த கைத்தொழிற்சாலைகளை நவீன தொழில் நுட்ப முறைக்கேற்ப கவர்ச்சிகரமான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் நவினப்டுத்துவதற்காக தேவையான இயந்திர உபகரணங்கள் மற்றும் பொருள் அவர்களுக்கு வழங்குவதற்கு இலங்கை தை;தொழில் அபிவிருத்திச சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த உற்பத்திப் பொருள்களை நியாயமான விலைக்கு விற்பனை செய்வதற்காக சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இக்பால் அலி
0 comments :
Post a Comment