தனது சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்குகின்றது இந்தோனேசியா.
இந்தோனேசிய அரசாங்கம், தமது குடிவரவு தொடர்பான சிவப்பு பட்டியலிலிருந்து இலங்கையை நீக்குவதற்கு, தீர்மானித்துள்ளதாக இந்தோனேசிய சட்ட மற்றும் மனித உரிமைகள் அமைச்சை மேற்கோள் காட்டி, ஜகார்தா போஸ்ட் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் குறிப்பிட்ட கால எல்லை நிறைவடைய 4 மாதங்களுக்கு முன்னர், இலங்கையை சிவப்பு பட்டியலிலிருந்து நீக்குவதற்கு, இந்தோனேசிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் பங்களதேஷையும், இப்பட்டியலிலிருந்து நீக்குவதற்கு, இந்தோனேசியா தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிலும், பங்களதேஷிலும், பொருளாதார மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில், கணிசமான அளவு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதால், இவ்வாறான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இந்தோனேசியாவின் சட்ட மற்றும் மனித உரிமை விவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளதன் பிரகாரமே இம்மாத இறுதியில் இலங்கையை தமது அபாய பட்டியலிலிருந்து நீக்கவுள்ளதாக, ஜகார்த்தா போஸ்ட் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment