போரிடும் பொறுப்பை ஆப்காஸ்னியர்களுக்கு கையளிக்கின்றது நேட்டோ
இறுதியில் தாம் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறவுள்ளதால் தனது தலைமையில் இயங்கும் பன்னாட்டு பாதுகாப்பு உதவிப் படையின் சகல போர் நடவடிக்கைப் பணிகளையும் 2013 நடுப்பகுதியில் ஆப்கானியர்களிடம் கையளிக்க ஏற்பாடு செய்து வருவதாக கூறப்படுகின்றது.
குறித்த காலத்துக்கு முன்னரே பிரான்ஸ் தனது படைகளை விலக்கிக்கொள்ள விருக்கும் நிலையில், பன்னாட்டுப் படைகளை ஒன்றாகவைத்து பாதுகாப்பைப் பேணிக்கொண்டு படிப்படியாக வெளியேற திறமுறை வகுத்துள்ளது. ஆப்கான் மலைகள் மற்றும் பாலை வனங்களிலிருந்து பாரிய பன்னாட்டுப் படையை தமது கருவிகளுடன் பாதுகாப்பாக தாய்நாட்டுக்குத் திருப்பி அழைத்துச் செல்வதிலுள்ள சவால்களைப் பற்றிச் சிந்திக்கின்றது என்று நேட்டோ இராஜதந்திரிகள் கூறினர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து ‘பின்னோக்கிய மாறலுக்கு’ அனுமதிக்குமாறு ஆப்கானிஸ்தானின் வடக்கு எல்லை நாடான உஸ்பெக்கித்தானுடன் ஒரு உடன்படிக்கை செய்து கொள்வதற்கான நோக்கம் இதுவாகும் என்று அவர்கள் குறிப்பிட்டார்கள். கடந்த வருடம் எல்லைகளுக்கிடை எதிர்பாரா மோதலில் 24 பாக்கிஸ்தான் படையினர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நேட்டோவுக்கான தனது வழங்கல் மார்க்கத்தை இஸ்லாமாபாத் மூடிவிட்டது. இதனை மீளத் திறப்பதற்கு பாக்கிஸ்தானைத் தூண்டுவதற்கு நேட்டோ முயற்சித்து வருகின்றது.
0 comments :
Post a Comment