பொன்சேகாவின் புதிய கட்சி – துணைவியார் அனோம துணைத்தலைவி
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் விசேட மன்னிப்பின் கீழ் விடுதலையான சரத் பொன்சேகாவின் தலைமையில் ‘ஜனநாயகக் கட்சி’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி உதயமாகிறது. அனோமா பொன்சேகா மற்றும் பா.உ. உறுப்பினர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் பிரதித தலைவர்களாக இருப்பார்கள் என்று பா.ம. உறுப்பினர் ஜயந்த கெட்டகொட கூறியதாக டெய்லி மிரர் இணைத்தளம் கூறிகின்றது.
தலைவராக ஜயந்த கெட்டகொடயும் செயலாளராக பா.ம. உறுப்பினர் டிரான் அலசும் செயற்படுவார்கள் என்றும் கட்சியைப் பதிவு செய்வதற்குரிய ஆவணங்கள் தேர்தல் ஆணையாளரிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் கெட்டகட மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment