வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள முஸ்லிம்களின் காணிப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மூன்று சட்டத்தரணிகளைக் கொண்ட உயர் குழு அமைக்கப்படவுள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலுள்ள முஸ்லிம்கள் காணிப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கிறார்கள். மற்ற இனங்களின் உரிமைகளையும் இன அடையாளத்தையும் பாதிக்காத வண்ணம் இதனைத் தீர்ப்பதற்கு ஆணைக்குழு வொன்றை அமைப்பது அவசியமானது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் மற்றும வர்த்தக அமைச்சருமான ரிசாட் பதியுத்தின் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றின் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
LLRC யின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் ஒவ்வொன்றினது கருத்துகளை ஜனாதிபதி கேட்டுள்ளார். அதற்கேற்ப உரிய அறிக்கையினை ஜனாதிபாதியின் செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளோம். எல்ரீரீஈயினர் அழிக்கப்பட்ட பின்னரும் கூட கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகளில் முஸ்லிம்கள் தமது பிரதேசத்துக்குத் திரும்பவோ பயிர்ச் செய்கையில் ஈடுபடவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் இடப்பெயர்ச்சிக்குள்ளான வட பகுதி முஸ்லிம் மக்கள் உரிய முறையில் மீளக் குடியமர்த்தப்படல் வேண்டும் எனவும் வேண்டியுள்ள அமைச்சர் பதியுத்தீன் வடக்கில் சகல அபிவிருத்தி வேலைகளும் எவ்வித இனப்பாகுபாடுமின்றி நடைபெறுகின்றது என்று மேலும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment