ஐந்து அமைச்சுக்களில் மாற்றம் ஏற்படலாம்.
ஜூன் மாத நடுப்பகுதியளவில் இடம் பெறவிருப்பதாகக் கருதப்படும் அமைச்சரவை மறுசீரமைப்பின் போது ஐந்து அமைச்சர்மாரின் துறைகள் மாற்றப்படவிருப்பதாகத் தெரிய வருக்கின்றது. ஐக்கிய கூட்டமைப்பின் இரண்டு சிரேட்ட செயலாளர்கள் இதற்கான பட்டியல் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்களாம்.
குறிப்பிட்ட அமைச்சர்மார்களுக்கும் செயலாளர்களுக்கும் இடையில் காணப்படும் பிணக்குகளால் பொது மக்கள் சேவை கீழே விழுந்துள்ளதென்று ஜனாதிபதி கடிந்து கொண்டதாக அவரது அலுவலகத்திலிருந்து தெரிய வருகின்றது.
எவ்வாறாயினும் தமது துறைகளில் மாற்றம் ஏற்படுவதில் பின்வாங்குவது இருவர் மாத்திரமே எனத் தெரிகின்றது.
அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பல அமைச்சுக்களின் செயலாளர்களும் கூட்டுத்தாபன தலைவர்மார் பலரும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
0 comments :
Post a Comment