தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு வற்புறுத்தி கூட்டமைப்பு உண்ணாவிரதத்தில் குதிக்கத் தீர்மானம்
விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கவனயீர்ப்பு உண்ணாவிரத போட்டம் ஒன்றில் ஈடுபடவுள்ளது.
இந்த கவனயீர்ப்பு உண்ணாவிரத போராட்டம் நாளை காலை 7 மணியளவில் வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கோரிக்கைகளை செவிமடுக்கும் வகையிலும் அவர்களின் விடுதலைக்காக சர்வதேச ஆதரவினை பெற்றுக்கொள்ளும் வகையிலும் இந்த போராட்டும் அமையும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுமார் 800 பேருக்கும் மேற்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகள் விசாரணைகளின்றி அரசியல் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் தொடர்பில் அரசாங்கம் அக்கறை கொள்ளவில்லை எனவும், அவர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்போவதுமில்லை எனவும், தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சர்வதேச நாடுகளின் ஆதரவுடனேயே தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, மகசீன் சிறைச்சாலை, கொழும்பு தடுப்புக்காவல் சிறைச்சாலை, அனுராதபுரம், களுத்துறை, வவுனியா, கண்டி போகம்பரை உள்ளிட்ட நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சிறைச்சாலை கைதிகள் ஏழாவது நாளாக இன்றைய தினமும் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
இதேவேளை,வுனியா சிறையில் விடுதலைப் புலிகளின் சந்தேக நபர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்து 7ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது 30க்கும் மேற்பட்ட தமிழ் கைதிகள் இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது உடல்நிலை மோசமடைந்ததுள்ளதை தொடர்ந்து, அவர்களை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment