சூரிய சக்தியால் இயங்கும் விமானமொன்று பரிசோதனை ரீதியாக தனது பயணத்தை சுவிட்சர்லாந்து நாட்டின் பேயர்னி பகுதியிலிருந்து ஆரம்பித்துள்ளது. சூரிய சக்தியால் முழுக்க முழுக்க இயங்கும் இவ்விமானத்தை ஆன்ரி போர்ஷ்பெர்க் மற்றும் பெர்ட்ரான்ட் பிக்கார்ட் ஆகியோர் விமானியாக செயற்படகின்றனர்.
70 கி.மீ.வேகத்தில் இயக்கப்படும் அவ்விமானம் ஸ்பெயின், மொராக்கோ உள்ளிட்ட நாடுகளுக்கு தனது பயணத்தை மேற்கொள்கின்றது.
பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாட்டைப் பிரிக்கும் பைரனீஸ் மலைகளைக் கடந்து செல்லும் இவ்விமானத்தின் இறக்கை, 63 மீட்டர் நீளமுடையதாவும் இறக்கை முழுவதும் சூரிய ஒளியை கிரகிக்கும் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன.
மொராக்கோ மன்னர் முகமதுவின் அழைப்பின் பேரில் இந்த விமானம் மொராக்கோ நாட்டின் ரபாத் நகருக்கு செல்ல உள்ளது. உலகில் அதிக அளவில் சூரிய மின்சக்தியை மொராக்கோ நாடு உற்பத்தி செய்கிறது. சூரிய மின் உற்பத்தி மையங்கள் இந்த நாட்டில் அதிகளவில் செயல்படுகின்றன.
No comments:
Post a Comment