டக்ளசின் புருடாவுக்கு ராஜபக்ச செருப்படி.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஈபிடிபி என்கின்ற டக்ளஸ் தலைமையிலான கட்சி வடக்கில் மேற்கொண்ட மனிதவிரோத செயற்பாடுகளை சுட்டிக்காட்டியதுடன் அதற்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் பரிந்துரை செய்திருந்தது.
தமது கட்சி வடக்கில் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது தமது கட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்த டக்ளஸ் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்தது.
அத்துடன் இது தொடர்பில் நீதிமன்றில் உதவியை பெற்றுக் கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இதுவரை அவரது சட்டநடவடிக்கை வழமையான வாய்சவடாலா அன்றில் அவரது சட்டத்தரணிகள் விடயம் தொடர்பாக நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனரா என்பது மர்மமாகவே உள்ளது.
இந்நிலையில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர முடியாது என சட்டத்தரணியும், பாராளுமன்ற உறுப்பினருமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் அறிக்கைக்கு எதிராக நீதிமன்றில் சவால் விடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ள அவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிராக வழக்குத் n;தாடர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணைக்குழுவின் சில சாட்சியங்கள் தொடர்பான மொழிபெயர்ப்புக்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
0 comments :
Post a Comment