வடபகுதியில் பாவனைக்கு தடை செய்யப்பட்டிருந்த அனைத்து வீதிகளும் திறக்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு வெள்ளமுள்ளி வாய்க்கால் பாதை மக்கள் பாவனை க்காக திறக்கப்பட்டதையடுத்து, வட மாகாணத்தில் மக்கள் போக்குவரத் திற்கான அனைத்து பாதைகளும், தற்போது திறக்கப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
வீதிகளின் இருபுறங்களிலுமுள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்றும் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து வருவதுடன், கண்ணி வெடிகள் அகற்றும் போது வீதிகளுக்கும், மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கும், முக்கியத்துவமளிக்கப்பட்டு கண்ணிவெடிகள் அகற்றும் பணிகள் இடம்பெற்றதனால் தற்போது அப் பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment