அரசியல் கட்சிச் சின்னப் பட்டியிலில் நாய் அகற்றப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிச் சின்னங்களின் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து நாய்ச் சின்னத்தை அகற்றுவதற்கு தீர்மானித்திருப்பதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய கூறினார். நாயின் உருவம் அரசியல் கட்சிக்கோ சுயேச்சைக் குழுக்களுக்கோ பொருத்தமற்றது என்பதால் இந்த தீர்மானத்தை எடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். இது வரை 139 சின்னங்கள அரசியல் கட்சிகளுக்காக அரசிதழில் வெளியிடப் பட்டுள்ளன. அவற்றில் இதுவரை 67 சின்னங்கள் அரசியல் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment