இலங்கையின் முதலாவது பளிங்குகல் தொழிற்சாலை மஹியங்கனையில்
மஹியங்கனை, கருமெட்டிய பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பளிங்கு கல் தொழிற்சாலை, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, ஊவா மாகாண முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ ஆகியோர் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து எடுத்து வரப்படும் பளிங்கு கற்கள் இத்தொழிற்சாலையில் மெருகூட்டப்பட்டு, உள்ளுர் மற்றும் வெளிநாட்டு சந்தைக்கு விற்பனைக்கு விடப்படவுள்ளது.
இக்கற்களிலிருந்து பெறப்படும் சிலிகா எனப்படும் மூலப்பொருள், கணனிகள் மற்றும் விமான உற்பத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதுடன், சந்தையில் இதற்கு பெரும் கேள்வியும் நிலவுகிறது.
0 comments :
Post a Comment