பிரித்தானிய “ ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பின் ” மாபெரும் விளையாட்டு விழா
பிரித்தானியாவில் இயங்கிவரும் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் புலம்பெயர்ந்தோர் அமைப்பு (Sri Lanka Muslim Diaspora Initiative UK) எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி (03.06.2012) Crawley யில் மாபெரும் விளையாட்டு விழா ஒன்றினை
நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யதுள்ளது.
இவ்விளையாட்டு விழாவினைக் கண்டுகளிப்பது மாத்திரமல்லாது, போட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வெற்றியீட்டுவதன் மூலம் சான்றிதழ்களையும், பெறுமதியான பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொள்ளலாம் எனவும், பெண்களுக்கான நிகழ்ச்சிகள் அனைத்தும் எமது கலாச்சார விழுமியங்களைப் பாதிக்காத வண்ணம் பிரத்தியேகமாக நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும், போட்டிகள் அனைத்தும் வயதெல்லையை அடிப்படையாகக் கொண்டு இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த தினம் பாடசாலை மற்றும் வங்கி விடுமுறை நாளாகவும் பொது விடுமுறை தினமாகவும் இருப்பதால் பிரித்தானியாவில் வாழும் அனைத்து சகோதர, சகோதரிகள் மற்றும் சிறுவர்கள் பங்குகொள்ளக் கூடியதோர் அறிய சந்தர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்கள் பிரிவிற்கான வயதெல்லை:
a) 5-10
b) 11-16
c) 16 வயதிற்கு மேல்.
பெண்கள் பிரிவிற்கான வயதெல்லை:
d) 5-10
e) 10 வயதிற்கு மேல்.
Kids Group:
f) Under 5 Kids – Bouncy Castle
விளையாட்டு விழா பற்றிய விபரங்கள்:
நடைபெறும் இடம்: Hazelwick School, Hazelwick Mill Lane, Crawley, West Sussex RH10 1SX
காலமும் நேரமும்: 03rd June 2012 (Sunday)
இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக பிரித்தானியாவைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
பொதுவான போட்டிகள் (ஆண்கள்):
*கிரிக்கட் சுற்றுப் போட்டி – இதில் 16 அணிகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டம்
*பாரம்பரிய விளையாட்டுக்களான கயிறு இழுத்தல், கிரீஸ் மரம் ஏறுதல், தலையணைச் சமர், முட்டி உடைத்தல், முயல் ஓட்டம், எலி ஓட்டம், சாக்கோட்டம், பனீஸ் சாப்பிடுதல், நடைப்போட்டி ஆகியவைகளும் நடைபெறும்.
அழகு ராஜாவைக் கண்டுபிடித்தல்.
பொதுவான போட்டிகள் (பெண்கள்):
பட்மின்டன், தேசிக்காய் ஓட்டம், பலூன் உடைத்தல், சங்கீதக் கதிரை, யானைக்கு கண் வைத்தல், போத்தலுக்குள் தண்ணீர் நிரப்புதல் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெறும்.
குறிப்பு: ஐந்து வயதிற்குட்பட்ட சிறார்களுக்காக Bouncy Castleஉம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நுழைவுக் கட்டணம்:
உயரம் 50 inchக்கு மேற்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5 பவுண்ட்ஸ் வீதம் அறவிடப்படும். இத்தொகையானது நுழைவுக் கட்டணம் மாத்திரமே, அனைத்து விளையாட்டுக்களிலும் இலவசமாகப் பங்குபற்ற முடியும்.
விசேட ஏற்பாடு:
*Sri Lankan Airlines உத்தியோகத்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு Flysmiles member எனும் சேவையொன்றினையும் வழங்கவுள்ளனர்.
*”The Holy makkah travel ” எனும் நிறுவனம் அன்றைய தினத்தில் 2012 இற்கான புனித ஹஜ் , உம்ராக்களுக்காக யாத்திரிகர்களை அனுப்புவதற்கான சேவைகளை (Special package) வழங்க இருக்கின்றது.
அதற்காக அன்று stall ஒன்றையும் அமைக்க இருக்கின்றது. அதில் ஹஜ் , உம்ரா செல்ல விரும்புவோர் தமது பெயர்களைப் பதிவு செய்து உரிய கட்டணங்களையும் அன்றே செலுத்துவார்களாயின் அவர்களுக்கு விஷேட சலுகைகள் (Discount) வழங்கப்படும் எனவும்,
விளையாட்டு அரங்கத்திற்கு வருகின்ற அனைவருக்கும் நியாயமான விலையில் சாப்பாடுகளை வழங்குவதற்காக கடைகளும் திறக்கப் பட்டிருக்கும் எனவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தனியாகப் பங்குபற்ற விரும்புவோர் மற்றும் குழுவாக பங்குபற்ற விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் வருமாறு:-.
For more information about CRICKET please contact
Bro:- Izzadeen 07507663384 , Bro:- Naseem 07507290273
For more information about OTHER SPORT
Bro:- Mirsan 07401323822 Bro:- Nswer 07577410315
If you interested to put up a STALL in this event please contact
Brother Fazmil:- 07429193753
For all OTHER INQUIRIES please contact
Bro Nazeer 07946076285, Bro Ameen:- 07587949490
0 comments :
Post a Comment