முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு 10 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளுடன் சற்று நேரத்துக்கு முன்னர் கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
கடவுச்சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டுக்கு செல்ல வேண்டுமாயின் நீதிமன்றின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரத் பொன்சேகாவிற்கு நாளைய தினம் பொது மன்னிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் சரத் பொன்சேகாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட முடியாது என்ற காரணத்தினால் இன்றைய தினம், பிணை வழங்கப்பட்டதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
0 comments :
Post a Comment