Wednesday, May 23, 2012

பொய் பேசும் குழந்தைகள் அறிவாளிகளாகும் வாய்ப்பு

குழந்தைப்பராயத்தில் பொய் பேசும் குழந்தைகள் எதிர்காலத்தில் சிறந்த புத்திசாலிகளாக மாற்றமடைவார்கள் என கனேடிய மருத்துவ ஆய்வாளர்கள் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

மிகவும் சிறிய பொய் பேசுதல் குழந்தையின் புத்தி சாதூரியத்தை வெளிப்படுத்தி நிற்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இரண்டு வயது முதல் பதினேழு வயது வரையிலான ஆயிரத்து இருநூறு சிறுவர் சிறுமியரிடம் நடத்தப்பட்ட இவ் ஆய்வின் மூலம் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டு வயதுடைய சிறுவர் சிறுமியரில் இருபது வீதமானவர்கள் மட்டுமே பொய் பேசும் ஆற்றலைக் கொண்டிருந்ததாகவும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது அதிகரிக்க அதிகரிக்க பொய் பேசுவோரின் எண்ணிக்கையும் உயர்வடைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

டொரொன்டோ சிறுவர் மருத்துவ பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட இவ் ஆய்வின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பிள்கைள் சிறு பொய்களைப் பேசினால் அது குறித்து பெற்றோர் பீதியடையத் தேவையில்லை எனவும் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பொய் பேசும் சகல குழந்தைகளும் எதிர்காலத்தில் மோசமானவர்களாக உருவாக மாட்டார்கள் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com