குருநாகல் மாநகர சபையில் கையொப்பமிடும் இயந்திர உபகரணம் இனந் தெரியாதவர்களால் சேதம்
குருநாகல் மாநகர சபையில் சேவையாற்றுபவர்கள் கையொப்பமிடும் இயந்திர உபகரணம் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக குருநாகல் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டள்ளதாகவும்குருநாகல் மாநகர முதல்வர் காமினி பெரமுனகே தெரிவித்தார்.
நகர சபையின் அலுவலக சேவையை முடித்து வெளியேறிய பின்னர் கையொப்பமிடும் இயந்திர உபகரணம் சேதமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவலாளிகளையும் மற்றும் நகர சபையில் தரித்து நின்று சேவையாற்றிய ஊழியர்களையும் சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்ததாக மாநகர முதல்வர் தெரிவித்தார்.
இது தனது நிருவாகத்திற்கு எதிரானவர்களால் மேற்கொள்ளப்பட்ட செயலாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment