ஷகிலுக்கு சிறைத் தண்டனை வழங்கியதால் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா பதிலடி.
இஸ்லாமாபாத் அருகிலுள்ள அபோதா பாத்தில் ஒசாமா பின்லேடன் மறைந் திருப்பதாக அமெரிக்க உளவுப்பிரிவான சி.ஐ.ஏ.க்கு தகவல் வழங்கினார் என குற்றஞ்சாட்டி பாகிஸ்தான் மருத்துவரான ஷகிலுக்கு 33 வருடகால சிறைத் தண்டனையை பாகிஸ்தான் நீதிமன்றம் விதித்திருந்தது.
பாகிஸ்தான் ஒசாமா பின்லேடன் மறைந்திருப்பதாக சி.ஐ.ஏ. சந்தேகித்த வீட்டில் இருந்தவர்களின் டி.என்.ஏ. மாதிரியை பெறுவதற்காக, அப்பகுதியில் போலியான, தடுப்பு மருந்தேற்றல் செயற்திட்டமொன்றை நடத்தி ஒசாமா பின்லேடன் மறைந்திருந்த இடத்தை காடடிகொடுத்தார் என்றும், தங்களது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தாக்குதல் நடத்தியதற்கு உதவியாக இருந்ததுடன் நாட்டுக்கு எதிராக சதி செய்தார் என்றும் குற்றஞ்சாட்டி அவரை சிறையிலடைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதற்கு பதிலாடியாக அமெரிக்காவினால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் 33 மில்லியன் அமெரிக்க டொலரை (3.30 கோடி டாலர்) நிறுத்தி அமெரிக்கா பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளது.
செனட் ஒப்புதல் குழுவில் கொண்டு வரப்பட்ட இந்தத் தீர்மானத்துக்கு குடியரசுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியினரும் ஒருமனதாக ஒப்புதல் வழங்கினர். டாக்டர் ஷகிலுக்கு வழங்கப்பட்ட தண்டனையில் ஓராண்டுக்கு ஒரு மில்லியன் என்ற அடிப்படையில் உதவித் தொகையை நிறுத்தி இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
செனட்டர் லின்ட்ஸ கிரஹாம் வியாழக்கிழமை கொண்டு வந்த இந்தத் தீர்மானத்துக்கு 30-0 என்ற கணக்கில் ஒருமனதாக ஒப்புதல் செனட் சபையினால் வழங்கப்பட்டுள்ளது.
அதே நாளில் பாதுகாப்புப் பணிகளுக்கான மற்றொரு செனட் குழு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 175 கோடி அமெரிக்க டாலர் உதவித் தொகைக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நேச நாடுகள் உதவி நிதி என்ற வகையில் இந்தத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதை பெறுவதற்கு விதிக்கப்படும் நிபந்தனைகளான "பயங்கரவாதிகளுக்கு உதவியாக இருக்க மாட்டோம், தனது மண்ணில் பயங்கரவாதிகள் தஞ்சம் புக அனுமதிக்க மாட்டோம், டாக்டர் ஷகில் அஃப்ரிதியை சிறையிலடைக்க மாட்டோம்" என்ற நிபந்தனைகளை பாகிஸ்தான் நிறைவேற்றியுள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் சான்றிதழ் அளித்தால்தான் இந்த நிதியை வழங்க முடியும் என்று செனட் குழு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அத்துடன் டாக்டர் ஷகிலுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதற்கு அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment