Thursday, May 17, 2012

சுதந்திர ஊடக இயக்கம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனு உச்சநீதிமன்றத்தால் நிராகரிப்பு.

தொலை தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவும் தகவல் ஊடகத்துறை அமைச்சும் சில இணையதளங்களை தடை செய்வதற்கு, மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக, சுதந்திர ஊடக இயக்கம் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

பிரதம நீதியரசர் ஷிரானி பணடாரநாயக தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு, இம்மனுவை தள்ளுபடி செய்ததுள்ளனர்.

இது தொடர்பாக, சிரேஷ்ட சட்டத்தரணி அலி சப்ரி கருத்து தெரிவிக்கையில் சுதந்திர ஊடக அமைப்பு சமர்ப்பித்திருந்த அடிப்படை உரிமை மனுவை, உச்சநீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சு ஆகியன உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடும் இணையதளங்களை தடை செய்ததை அத்தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தும் வகையில், சுதந்திர ஊடக இயக்கம் அடிப்படை உரிமை மீறல் என மனு தாக்கல் செய்திருந்நது.

அதற்கிணங்க வரையறையின்றி எந்தவொரு செய்தியையும் பெற்றுக்கொள்ளும் உரிமையையும், வெளியிடும் உரிமையும் தமக்கு உண்டு என, சுதந்திர ஊடக இயக்கம் குறிப்பிட்டிருந்தனர்.

அமைச்சு சார்பிலும், தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சார்பிலும் ஆஜரான சட்டத்தரணிகள், எந்தவொரு செய்தியும், நாட்டில் உள்ள சட்டத்திற்கு உட்படுவதாகவும், ஒரு தனிநபரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில், செய்திகளை வெளியிடும் உரிமையும், ஏனைய நபர்களை ஏளனத்திற்கு உட்படுத்தும் செய்திகளையோ, அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் செய்திகளை வெளியிடும் உரிமை இல்லையெனவும், வாதிட்டனர்..

அத்துடன் எந்தவொரு இணைதளமாக இருந்தாலும், ஏனைய ஊடகங்களை போன்று, அதனை வெளியிடும் உரிமையை ஒருவர் பொறுப்பேற்க வேண்டுமென்றும், அதனால் பாதிக்கப்படும் எவராவது இருந்தால், அவருக்கு சட்டத்தின் உதவியை நாட முடியுமென்றும், அதற்கான தீர்வினை பெற்றுக்கொள்வதற்கு, சந்தர்ப்பம் இருப்பதாகவும், வாதிட்டனர்..

இவ்விடயங்களை ஆராய்ந்த உச்சநீதிமன்றம், ஊடகத்துறை அமைச்சு மற்றும் தொலைதொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு ஆகியவற்றினால் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவின் மூலம், சுதந்திர ஊடக இயக்கத்தின் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லையென்பது, தெளிவாகின்றது என்றும், இதனால் இங்கு அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லையென, தெரிவித்து உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com