பிள்ளையை மீண்டும் எதிர்க்கிறது இலங்கை
கடந்த மார்ச் மாதம் இலங்கைகு எதிராக எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை மற்றும் அவரது பணியாற்றொகுதியினர் வகித்த பங்கு மீதான தனது எதிர்ப்பை உத்தியோக முறையில் பதிவு செய்ய இலங்கை தீர்மானித்திருக்கிறது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள் சபைபகான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமாரா குணநாயகம் அவர்கள் இது தொடர்பான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் தெரிவிக்கின்றது.
ஐக்கிய நாடுகள்பொதுச் சபையால் பிள்ளைக்கு அளிக்கப்பட்ட அதிகாரம் மற்றும் ஐக்கிய நாடுகள் சாசனம் ஆகியவற்றை பிள்ளை அவர்கள், மீறியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆகவே, அவர் மீதான தனது எதிர்ப்பை பதிவு செய்து உயர் ஆணையருக்கு ஒரு கடிதம் அனுப்புவதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதாக மேலும் அத்தகவல்கள் கூறுகின்றது. கிடைக்கும் தகவலின்படி இப்போது கடிதம் வரைவு செய்யப்படுகின்றது.
ஏற்கனவே, ஒத்த நிலைப்பாட்டைக் கொண்ட சீனா, இரஷ்யா மற்றும் கியூபா போன்ற நாடுகள் இலங்கைக்கு எதிரான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதில் யூஎன்எச்ஆர்சி சாசனத்தை மீறியுள்ளது என்று கூறின.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆதரவளித்த தீர்மானம் 2012 மார்ச் 23-ம் திகதி யூஎன்எச்ஆர்சி- 8 நாடுகள் நடுநிலை வகிக்க 24-க்கு 15 அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது. அத் தீர்மானத்தை முறியடிக்க அது ஒரு நாட்டின் இறைமையை மீறுவதற்காக உலக வல்லரசுகளால் மேற்கொள்ளப்பட்ட தான்தோன்றித்தனமான ஒரு செயல் என்று இலங்கை அரசு முழுமையான ஒரு பிரச்சாரத்தை மேற் கொண்டது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் (எல்எல்ஆர்சி) பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தும்படி மேற்படி தீர்மானம் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
தீர்மானத்தின்படி, அடுத்த மார்ச்சில் நடைபெறவிருக்கும் அதன் அமர்வில், மனித உரிமைகள் பற்றிய பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இலங்கை மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு ஐநா உயர் ஆணையர் கேட்கப்பட்டுள்ளார்..
0 comments :
Post a Comment