சர்வதேச ரீதியான புலிகளின் அச்சுறுத்தல்கள் இருக்கும்வரை காவலரண்கள் அகற்றபடமாட்டாது
மூன்று தசாப்த காலமாக நாட்டில் நிலவிய பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவத்தினரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட வெற்றியை நினைவு கூறும் 3 ஆம் ஆண்டு நிகழ்வு விழா காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ "பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கை ராணுவத்தினரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட வெற்றியை அர்த்தப்படும் வகையில் இலங்கையை கட்டியெழுப்ப வேண்டும" என தெரிவித்துள்ளார்.
அவர் அங்து கருத்து தெரிவிக்கையில் "இலங்கை மக்களை பயங்கரவாதத்திடமிருந்து பாதுகாப்பதற்கே ராணுவத்தினர் மனிதாபினமான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். அத்துடன் தற்போது நாட்டை கட்டியெழுப்பும் கடமையும் அவர்களுக்கு இருக்கின்றது" என தெரிவித்தார்
"இலங்கை இராணுவம் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது தெற்கு மேற்கு என இலங்கையின் சகல பிரதேசங்களிலும் முகாம்களை வைத்திருக்கின்றதே தவிர வேறு எந்த நாட்டிலும் முகாம்களை வைத்திருக்கவில்லை" என தெரிவித்தார்
அத்துடன் "சர்வதேச ரீதியான புலிகளின் செயற்பாடுகள், அச்சுறுத்தல்கள் இருக்கும் வரை எந்தவொரு ராணுவ காவலரண்களையும் அகற்றுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை" எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை செயற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அன்நடவடிக்கை இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுமே தவிர பிளவை ஏற்படுத்துவதற்கு ஒரு போதும் பயன்படுத்தப்படமாட்டாது" எனவும் தெரிவித்துள்ளார்.
"பயங்கரவாதத்தை தேற்கடித்ததன் பின்னர் நாட்டில் இன்று அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் இல்லை. வீதிச் சோதனை சாவடிகள் இல்லை வடக்கு கிழக்கில் சிவில் நிர்வாகம் தற்போது சிறப்பாக இடம்பெறுகின்றது" எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் பிரதமர் தி. மு. ஜய ரட்ன, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, பிரதம நீதியரசர் திருமதி கலாநிதி ஷிராணி பண் டாரநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி எயார் சீப் மார்ஷல் ரொஹான் குணதிலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் ஹர்ஷ அபேவிக்ரம, பொலிஸ் மா அதிபர் என். கே. இளங்ககோன், சிவில் பாதுகாப்புப் படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் உட்பட அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், வெளிநாட்டு உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment