விபத்துக்குள்ளான ரஷ்ய விமானத்தின் கறுப்பு பெட்டி கண்டுபிடிப்பு
கடந்த வாரம் இந்தோனே சியாவில் விபத்துக்குள்ளான ரஷ்யப் பயணிகள் விமானத்தின் கறுப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டுள்ளது. எரிமலையில் மோதல மற்றும் புதிய விமானத்தின் செயல்பாடுகளை விளக்குவதற்காக, இந்தோனேசியாவின் ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து, கடந்த வாரம் 48 பேருடன் சுகோய் விமானம் புறப்பட்டது. புறப்பட்டு 20 நிமிடத்திற்கு பிறகு, மேற்கு ஜாவாவின் போகோர் என்ற இடத்தில் உள்ள, சலாக் எரிமலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிலிருந்த அனைவரும் பலியாகினர். விமானத்தின் பாகங்களையும், சடலங்களையும் மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது, இதற்கிடையே மீட்பு குழுவினர் விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கண்டெடுத்துள்ளனர். இந்த கறுப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை வைத்துத்தான், விபத்துக்கான காரணத்தை கண்டறிய முடியும என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்
0 comments :
Post a Comment