ஆலய சிவலிங்கம் அசைக்கப்பட்டு புதையல் வேட்டையா?
புராதன பொலன்னறுவ சிவன்ஆலயத்தில் புதையல் தோண்ட முயன்றவர்களால் அங்கிருந்த சிவலிங்கம் அகற்றப்பட்டு அதன் பீடத்தின்கீழ் 4 அடிவரை தோண்டப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதையல்தோண்டுபவர்கள் இங்கிருந்து எதையேனும் எடுத்துச் சென்றனரா என்பது பற்றி இதுவரை எதுவும் தெரியாதுள்ளது.
தொல்பொருள் ஆராய்ச்சித்திணைக்களத்தின் பாதுகாப்பிலுள்ள பொலன்னறுவபுராதன தொல்பொருள் அபயபூமியில் அமைந்துள்ள சிவன்கோவிலில் நடைபெற்றுள்ள இச்சம்பவம்பற்றி, திணைக்களத்திற்கு எதுவுமேதெரியாதிருப்பது ஆச்சரியமளிப்பதாகவுள்ளது.
பொலன்னறுவராஜதானி, சோழமன்னர்களின் ஆட்சிக்குட்பட்டிருந்தகாலத்தில் ‘ஜனநாதமங்கலம்’ எனப்பெயரிடப்பட்டிருந்தது. சோழமன்னர்களின் ஆட்சிக்காலமான கிறிஸ்துவுக்குப்பின் 10 ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் அமைக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த சில நாட்களாக நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதையல் தோண்டும் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த 4 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான 107 க்கும் அதிகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் கூறுகின்றனர். இவற்றோடுதொடர்புடைய 350 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதுடன் இவர்கள் வசமிருந்த பாரிய அகழ்வு இயந்திரங்கள் வாகனங்கள் என்பவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஐக்கியதேசியக் கட்சியின் ஊடகவியலாளர்சந்திப்பில் கருத்துவெளியிட்ட கட்சியின்பேச்சாளர், கயந்தகருணாரத்ன, புதையல்களைக் கண்டு பிடித்துத் தோண்டுவதற்காக நவீனரக உபகரணங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவற்றை யார் எப்படிக் கொண்டுவந்தனர் என்று எவருக்கும் தெரியாமலுள்ளது என்றும் தெரிவித்திருந்தார்.
0 comments :
Post a Comment