விடுதலையோ அல்லவோ அவர் மருத்துவ மனையிலேயே இருப்பார். –
சில தினங்களுக்குள் சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அது யாருடைய எதிர்பார்ப்புக்காக என்று தெரியாது என்று அனோமா பொன்சேகா கூறினார். அவர் விடுதலை பெறுவதானால், அது இம்மாதம் 31ம் திகதி மேன்முறையீட்டு நீதி மன்றத்தில் இடம் பெறும் சட்டப்படியான எமது பிணைமனு விசாரணையைத் தொடர்ந்தாகும்.
எப்படி விடுதலையானாலும் அவர் மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெறுவார். அவர் நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நிலையிலிருந்து அவர் சுகம் பெற்ற பின்னரே அவர் வீடு வரக்கூடியதாக இருக்கும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேநேரம் கடந்த 5ம் திகதி பௌர்ணமி தினத்தில் இடம் பெறவிருந்த சரத் பொன்சேகாவின் விடுதலை, அவர் சார்பில் இணக்கம் ஏற்படுத்துபவராகச் செயல்படும் பா.ம. உறுப்பினர் டிரான் அலஸ் தற்போது இலண்டனில் தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டிருப்பதால் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக அரச உயர் மட்டத்தில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.
டிரான் அலஸ் அவர்கள் இலங்கை திரும்பிய பின்னர் அது தொடர்பாக ஆவன செய்யவிருப்பதாகவும் அறிய முடிகின்றது. மூச்சுக் குழல் அழற்சி நோயினால் கொழும்பு நவலோக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் சரத் பொன்சேகாவின் சிறைவாசம் ஜூலை மாதத்தில் நிறைவடைகின்றது.
0 comments :
Post a Comment