ஐக்கிய இராச்சிய வீசாவுக்கு மீளவும் விண்ணப்பிக்கவும்
ஐக்கிய இராச்சியத்துக்குப் பயணம் செய்வதற்கான ‘விசிட் வீசா’ மறுக்கப்படும் போது அதற்கு எதழராக மேன்முறையீடு செய்யாமல், மீள் விண்ணப்பம் செய்வது காலவிரயத்தையும் பணச் செலவையும் மிச்சப்படுத்தும் என்று பிரித்தானிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.
பிரித்தானிய குடிவரவு அமைச்சர் டேமியன் கிரீண் புதிதாக வெளியிடப்பட்டுள்ள சட்டமூலத்தின் படி பெருந் தொகையான விண்ணப்பதாரிகள் மேன்முறையீடு செய்யும் உரிமையை இழப்பர் என்றும் வீசா மறுக்கப்பட்ட விண்ணப்பதாரிகள் மனித உரிமைகள் மற்றும் இனப்பாகுபாடு போன்ற வரையறுக்கப்பட்ட காரணங்களின் மீது மேன்முறையீடு செய்யலாம் என்றும் தெரிய வருகிறது. யாரும் பிரித்தானியாவுக்கு வருவதைத் தடுக்கவில்லை யென்றும் விண்ணப்ப விதிகளை நிறைவு செய்திருப்பின் வீசா வழங்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார். இந்த மாற்றங்கள் பிரித்தானியா மேன் முறையீட்டுக்காகச் செலவிடும் பெருந் தொகைப் பணத்தை மீதப்படுத்தி, மிக முக்கிய வேலைளுக்குப் பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
முன்பு 2000-ல் மேன்முறையீட்டு உரிமை வழங்கப்பட்டதிலிருந்து அவற்றின் எண்ணிக்கை ஆண்டுக்கு 20,000 வரை காணப்பட்டது. 2010-11-ல் அது 50,000 வரை உயர்துள்ளதாகவும் தூதரகத்தின் அறிக்கை கூறுகின்றது. ஆண்டுக்கு 29 மில்லியன் பவுண் மேல் முறையீட்டுச் செயற்பாடுகளுக்கு செலவிடுவதாகவும் இதனை வேறு பயனுள்ள முக்கிய பணிகளுக்குச் செலவிட முடியும் என்றும் கூறப்படுகின்றது.
0 comments :
Post a Comment