முன்னான் இராணுவ தளபதி சரத்பொன்சேகா நேற்று ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமையையிட்டு மகிழ்ச்சி தெரிவிக்கும் வகையில் இன்று நீர்கொழும்பு நகரில் பாற்சோறு வழங்கி கொண்டாடப்பட்டது.
நீர்கொழும்பு - தளுபத்தை தேவாலயம் முன்பாக நீர்கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் இடம் பெற்ற இந்நிகழ்வை தளுபத்தை இளைஞர் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
மேல் மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் சட்டத்தரணி ரோஸ் பெர்னாந்து, நீர்கொழும்பு மாநகர சபையின் எதிர்கட்சித் தலைவர் ரொயிஸ் விஜித்த பெர்னாண்டோ ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மக்களுக்கு பாற்சோறு வழங்கி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
செய்தியாளர் - எம்.இஸட்.எஸ்.
No comments:
Post a Comment