Thursday, May 31, 2012

யாழ். மக்கள் இலங்கைக்குள் ஒளிமயமாக வாழ்கின்றனர்- சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்

இலங்கை வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கே.சண்முகம் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். யாழ். விஜயம் தொடர்பாக கருத்து தெரிவித்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர்,

"கடந்த 30 வருட காலம் யாழ்ப்பாணத்தில் என்ன நடந்தது என்பதை சிங்கப்பூர் பத்திரிகை ஊடாகவே அறிந்தேன். ஆனால், இன்று நேரில் யாழ்ப்பாணத்தை பார்வையிடுவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது யாழ். மக்கள் இலங்கைக்குள் ஒளிமயமான எதிர்காலத்துடன் வாழ்கின்றனர்" என தெரிவித்தார்.

அத்துடன் யாழ். நூலகத்தின் சிறுவர் பகுதியில் கணணி இணைப்புக்களை ஏற்படுத்துவதற்கு சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதுடன் சிறுவர்களின் கணணி அறிவை வளர்ப்பதற்கு அதற்குரிய ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இதேவேளை சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் நேற்று மாலை திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஆகியோரை சந்தித்ததுடன் அம்மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை கேட்டறிந்துகொண்டதாகவும் தெரிவிக்ப்படுகின்றுது

1 comments :

Anonymous ,  May 31, 2012 at 7:47 PM  

Well said,we need the truth should go to the outer world and not the imagined Mickey Mouse stories.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com