அதிகளவு ஹோர்ன் ஒலியை எழுப்பும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ஒலியை விட அதிகளவு ஹோர்ன் ஒலியை எழுப்பும் சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சட்டமூலம் ஒன்று தேசிய சுற்றாடல் சட்டத்தின் கீழ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.
நீதிமன்றங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு அருகில் ஹோர்ன் ஒலி எழுப்பும் வாகன சாரதிகள் சட்டப்பூர்வமாக தண்டிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் மேற்குறித்த இரு இடங்களை தவிர ஏனைய இடங்களில் அதிகளவில் ஒலி எழுப்பும் வாகன சாரதிகள் உரிய வகையில் தண்டிக்கப்படாததால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தேசிய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment