இன்று நான் சுமையற்றவள் – அனோமா
'புதுமையான சுமையற்றவளாக இன்று நான் இருக்கின்றேன்'. அனோமா மிக்க மகிழ்ச்சியுடன். சரத் பொன்சேகா தொடர்ந்தும் நவலோக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெற உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் தொடர்ந்து கூறுகையில் பொன்சேகாவுக்கு வைத்தியம் செய்த வைத்தியரை அகற்றினார்கள். வைத்தியசாலையை மாற்றினார்கள். நீதி கேட்டோம். உயர் நீதி மன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதனை நாங்கள் தலை வணங்கி ஏற்றுக் கொள்கின்றோம். மேலும் அதனையே எதிர் பார்க்கின்றோம். இன்று போல என்றுமே நான் சுமையற்றவளாக இருந்ததாக உணரவில்லை. எல்லோருக்கும் நோயற்ற வாழ்வே முக்கியம். அதை எனது கணவருக்கு பெற்றுக் கொடுக்க அனுமதித்ததற்கு எனது மனமார்ந்த நன்றிகள் என்று திருமதி அனோமா பொன்சேகா கூறியுள்ளார்.
0 comments :
Post a Comment