Saturday, May 19, 2012

உலக பணக்கார நாடுகளின் வரிசையில் கட்டார் முதலிடத்தில்

அமெரிக்காவின் போர்பஸ் பத்திரிகை மேற்கொண்ட கருத்து கணிப்பில் கட்டார் உலகின் பணக்கார நாடுகளின் வரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளது. இக் கருத்து கணிப்பில் கட்டார் துபாய், குவைத் உட்பட 15 நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

1.7 மில்லியன் மக்கள் தொகையை கொண்ட கட்டாரில் தனி நபரின் ஆண்டு வருமானம் சுமார் 88 ஆயிரம் அமெரிக்கக டொலராக உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு அடுத்த படியாக ஐக்கிய அரபு குடியரசு 47 ஆயிரத்து 500 அமெரிக்க டொலரை கொண்டுள்ளது. இதன்படி இந்த நாடுகளின் வரிசையில் குவைத் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.

இரண்டாம் இடத்தில் உள்ள லக்சம்பர்க்கின் ஆண்டு வருமானம் சுமார் 81 ஆயிரம் டொலராகும். மூன்றாம் இடத்தில் உள்ள சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் 56 ஆயிரத்து700 டொலராகும். மேலும் நோர்வே, புருனேயை தொடர்ந்து ஐக்கிய அரபு குடியரசு, அமெரிக்கா, ஹாங்காங், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகள் முதல் ஐந்து இடங்களுக்குள் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.

அதேசமயம் புருண்டி, லிபேரியா, ரீபப்ளிக் ஆப் காங்கோ போன்ற நாடுகளின் தனிநபர் வருமானம் சுமார் 300 முதல் 400 அமெரிக்க டொலர் என்ற அளவில் மட்டுமே உள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com