பயங்கரவாதம் மீண்டும் எழாதவாறு தடுக்கும் பொருட்டு புலனாய்வு பிரிவினரின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க எந்தவாய்ப்பும் கிடையாது என்று தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத்ஜயசூரிய இவ்வாறானதொரு நிலைஏற்படுவதைத் தடுக்கதேவையான சகல நடவடிக்கைகளையும் பாதுகாப்புப்பிரிவினர் மேற்கொண்டுள்ளார்கள் எனவும் தனியாக செயற்பட்ட பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு இணைக்கப்பட்டுள்ளதுடன் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறயுள்ளார்.
தேசிய சர்வதேச மட்டத்திலான புலனாய்வுத்தகவல்களை பெரும் வேலைத்திட்டம் அமுலாகிறது. புலனாய்வுவிசாரணைகளும், இராணுவப் பயிற்சிகளும் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன.
நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காதிருக்க மக்களின் பூரண ஒத்துழைப்பு அவசியம் என்று இராணுவத் தளபதிகூறினார்.
மூன்று தசாப்தமாக நிலவிய பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டி, நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த அர்ப்பணித்த இராணுவ வீரர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பும், கௌரவமும் தொடர்ந்து கிடைக்கவேண்டும் என் அவர் வலியுறுத்தினார்.
இராணுவத்தில் முழுமையான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. இதன் மூலம் எந்தசவாலுக்கும் முகங்கொடுக்கும் வல்லமையுடன் கூடிய தொழில்சார் இராணுவமாக இலங்கை இராணுவத்தைமாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சகல மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் இராணுவ வீரர்கள் நிலை கொண்டுள்ளார்கள். நாட்டில் இடம்பெறு ம் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு இராணுவம் ஒத்துழைப்பு வழங்குகிறது.
இராணுவ ரீதியான அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையும் இடம்பெறுகிறது. நான்கு நாடுகளின் பங்கேற்புடன் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவிருக்கிறது. சர்வதேச பாதுகாப்பு மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட்மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளது. இதில் 66 நாடுகள் பங்கேற்கவுள்ளன.
0 comments :
Post a Comment