பாசிக்குடா உல்லாசத்துறை வலய நிர்மாணம் பூர்த்தியடையும் நிலையில்
பாசிக்குடா உல்லாசத்துறை வலய நிர்மாணம் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளது. பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அங்கு நிலைமைகளை நேரில் சென்று அவதானித்துள்ளார்.
உல்லாசத்துறை வலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும், முன்னேற்றங்கள் குறித்தும் ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் அடிப்படை வசதிகளை வழங்குவோருடன் அமைச்சர் கலந்துரையாடியுள்ளார்.
இந்த வலயத்தின் நிர்மாணப் பணிகள் அனைத்தும் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் பூர்த்தி செய்ய வேண்டும். நிர்மாணப் பணிகளை நிறைவு செய்யாத ஒப்பந்தக்காரர்களின், ஒப்பந்தங்கள் ரத்துச் செய்யப்படும். இங்கு மொத்தம் 14 ஹோட்டல்கள் நிர்மாணிக்கப்பட உள்ளன. இவற்றுள் ஏற்கனவே இரண்டு ஹோட்டல்கள் உல்லாசப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment