தேசிய புலனாய்வு அமைப்பால் எந்தவித பயனும் இல்லை - ஜெயலலிதா
இந்தியாவில் தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அனைத்து மாநில முதல்வர்கள் மாநாடு டில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேசிய தீவிரவாத தடுப்பு மையம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளடன் தேசிய புலனாய்வு அமைப்பால் எந்தவித பயனும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசியதாவது, என்சிடிசி அமைப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்கள் குழுவை அமைத்து ஆராய வேண்டும்.
அந்த குழு அறிக்கை தரும் வரை என்சிடிசி மையத்தின் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் இந்த மையம் மூலம் மாநில அரசுகளின் அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சிக்கக்கூடாது.
இந்த மையம் பற்றி மத்திய, மாநில அரசுகள் கலந்து ஆலோசிக்க வேண்டும். இதற்கு முன் அமைக்கப்பட்ட தேசிய புலனாய்வு அமைப்பால் எந்தவித பயனும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்..
0 comments :
Post a Comment