சகலருக்கும் நன்மை பயக்கும் ஆட்சியை அமைப்பாராம் சஜித் பிறேமதாஸ
இன மத பேதங்களிலில்லாமல் நாட்டிலுள்ள சகலருக்கும் நன்மை அளிக்கும் விதத்திலான ஆட்சியை எதிர்காலத்தில் நான் அமைப்பேன் என்று தே.க.வின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நீர்கொழும்பு, கட்டுவ பிரான்ஸிஸ் ஸாலிஸ் தேவாலயத்துக்கு 50 ஆயிரம் ரூபாவை அன்பளிப்பாக வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்சொன்னவாறு குறிப்பிட்டார். நேற்று மாலை)நடைபெற்ற இந்நிகழ்;வில் மேல் மாகாண சபை உறுப்பினர் ரோஸ் பெர்னாந்து, நீர்கொழும்பு மானகர சபையின் ஐ.தே.க.வின் உறுப்பினர்கள் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர் .
பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது,
யுத்தத்தின் பின்னர் எமது நாடு பாரிய அபிவிருத்தியை அடைய கூடிய வாய்ப்பு இருந்தது அதனை நாங்கள் இழந்திருக்கின்றோம். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி 8.3 சத வீதம் என்று கூறப்படுகின்றது. ஒவ்வொருவருக்கும் அவர்களது பொருளாதார நிலையையும் மற்றும் வாழ்க்கை தரத்தையும் ஒப்பிடுகையில் இது புரிகிறதா? என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
எமது நாடு பாதாளத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறது ஆட்சியில் உள்ளவர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் , அடியாட்களுக்குமே நன்மை பயக்கும்; விதத்தில் ஆட்சி நடத்தப்படுகிறது . நிலத்துடனும் கடலுடனும் போட்டியிட்டு வாழ்கை நடத்தக்கூடிய ஏழை மக்களுக்கு பொருளாதார அபிவிருத்திகளின் நன்மை போய் சேர வேண்டும் .
நாட்டிலுள்ள 2 கோடி மக்களுக்கும் நன்மை தரக்கூடிய வித்ததில் ஆட்சி நடத்தப்பட வேண்டும். இன மத பேதங்களிலில்லாமல் நாட்டிலுள்ள சகலருக்கும் நன்மை அளிக்கும் விதத்திலான ஆட்சியை எதிர்காலத்தில் நான் அமைப்பேன் என்றார்.
0 comments :
Post a Comment