தனியார் தொழிற்சாலையொன்றில் தற்செயலாக ஏற்பட்ட விபத்தில் வாயுக் குழாய் வெடித்ததில் கசிந்த அமோனிய விசவாயுவை உட்சுவாசித்து கடும் சுகயீனமுற்ற நிலயில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி நேற்று திங்கட்கிழமை இரவு 10.30 மணியளவில் மரணமடைந்துள்ளார்.
வாரியபொல பிரதேசத்தை சேர்ந்த ஈ.எச். ஹேமலதா என்பவரே (42 வயது) மரணமானவராவார். இவர் இரண்டு பிள்ளைகளின் தாயாராவார்.
நீ;ர்கொழும்பு - தங்கொட்டுவ பிரதேசத்தில் அமைந்துள்ள மீன்களை பதனிடும் தொழிற்சாலையில் கடந்த 15 அம் திகதி தவறுதலாக இடம்பெற்ற விபத்துச் சம்பவத்தில் ஏழு பேர் சுகயீனமுற்ற நிலையில் நீகொழும்பு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் ஆறு பேர் சுகமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறினர். குறித்த பெண் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதமிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் ஏழு தினங்களின் பின்னர் நேற்றிரவு மரணமடைந்துள்ளார்.
No comments:
Post a Comment