சரத் பொன்சேகாவுக்கு 7வது திறந்த மடல். தங்களுக்கு எனது அன்பான அறிவுரைகள்.
கண்டியிலிருந்து ஸ்டான்லி பெரேரா.
எனது அன்புள்ள சரத்துக்கு,
உங்களுக்கு ஆறு திறந்த கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அவற்றின் எனது அன்பான அறிவுரைகளை வழங்கியுள்ளேன். நீங்கள் யூன் 19 ல் ஒரு யுத்த வீரராகவும், நாட்டை அரசியல் ஊழலில் இருந்து மீட்கவும், மக்களை கடன் சுமை மற்றும் அரசியல் மற்றும் பொருளாதார மோசடியாளர்களிடம் இருந்தும் காப்பாற்றவும் எதிர்காலத் தலைவராக விடுதலையாகி வெளியே வருவீர்கள் என்பது நிச்சயம் என்பதால், அது இந்த முறை தங்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மீளுருவாக்குவதற்கு உரிய காலமாகும்.
ஆட்சி மாற்றத்தை எதிர்பார்க்கும் மேற்கு மற்றும் ஜி.எல்.பீரிசின் ஆதரவு பெற்ற தங்களை நாடுத் தலைவராக ஏற்றுக் கொள்ள ஆயத்தம். ஹிலாரி மற்றும் முண்டாசு இந்தியனுடைய பொம்மையாக மாறியுள்ள மோசக்கார அரசியல்வாதகளில் இலங்கையர் விரக்தி அடைந்துள்ளனர். ஊழல் நிர்வாகததுக்கு இடமளிக்காத ஒழுக்கமுள்ள வீரரான தங்களை மக்கள் வீரத் தலைவராக ஏற்றுக் கொள்வார்கள். தாங்கள் இன்றைய நெல்சன் மண்டேலா அலலது ஆங்-சாங்-சூகி. வீரத் தலைவர் பிறந்துள்ளார்.
வடக்கு கிழக்கைப் பிரித்ததற்கு சரத் நந்த சில்வாவுக்கு நான் தலை தாழ்த்தி வணங்குகின்றேன். அவர் தங்களுக்கு சிறந்த அறிவுரையாளராக இருப்பார்.
உலகில் அரசியல் புரட்சி ஆரம்பமாகிவிட்டது. ஐஸ்லாந்தில் இது ஆரம்பித்து விட்டது. மக்கள் கிளர்ந்தெழுந்து அரசை அகற்றி அரசியலமைப்பையும் மாற்றி விட்டார்கள். வெளிநாட்டுக் கடன்களை இரத்து செய்து விட்டார்கள். இலங்கையின் இரண்டு அரச வங்கிகள் 162 பில்லியன் கடனைத் தள்ளுபடி செய்து விட்டன. எந்தவித பிணையும் இல்லாமல் கடன் கொடுத்திருக்கின்றன. கடனாளிகளின் பெயரை வெளியிட மறுக்கின்றன. உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில்; இதனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்;. ஐஸ்லாந்து மாதிரியை தாங்கள் கைக் கொள்ள வேண்டும். இதனால் உலக ஒற்றர்களின் தலையீட்டை தாங்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். தமிழ் மக்களின் கண்ணுக்குத் தெரியாததும் இல்லாததுமான பிரச்சினை பற்றியல்லாது, சிங்களவரின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்த வேண்டும்.
தமிழ் தேசிய கூட்டமைப்புடன் கவனமாக உறவு கொள்ள வேண்டும். அவர்கள் பிரிவினை, தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு ஒரே இலங்யைர் கோட்பாட்டை ஏற்க வேண்டும். அப்போது தனியான இனப் பிரச்சினை இல்லாது போய்விடும்.
ஐ.தே.க. கைநீட்டி தங்களை வரவேற்கும். ஆனால் மக்களிடம் பெரும் விரக்தி நிலவுகின்றது எனவே, சகல எதிர்க் கட்சிகளும் இணைந்து ஒரு அரசியல் கட்சியை உருவாக்க வேண்டும். மேற்கு நாடுகளை பெரும்பாலான இலங்கையர் வெறுத்தாலும,; தயக்கத்துடனாவது அவர்களை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. பல அரசியல்வாதிகளும் குருமாரும் கிளின்டனின் சம்பளப் பட்டியலில் இருக்கின்றனர். அவர்கள் ஊடுருவல் செய்து விடலாம் கவனம் தேவை. ஆதரவாளர்களை வடிகட்டி எடுக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் மீது மேற்கு கடுப்பாக இருப்பதால். தாங்கள் அவர்களின் பொம்மையாகி விடலாம் தற்போது ஜி.எல்.பீரிஸ் செய்வது போல. அவர் கிளின்டனுக்கும் இந்திய முதலமைச்சர்மாருக்கும்; அறிக்கை அனுப்பிக் கொண்டிருக்கிறார.; தாங்கள் ஒரு துணிகரமான படைவீரர் மேற்கின் அழுத்தத்துக்கும் இந்தியாவின் அச்சுறுத்தலுக்கும் பணிய வேண்டாம். எல்லா ஊழல் அரசியல்வாதிகளையும் தண்டிக்கவும். மக்களின கடன் சுமையைக் குறைக்கவும். அரசியல்வாதிகளிடமிருந்து இலங்கையரைக் காப்பாற்றவும். பாரளுமன்றத்தில் அரசியல்வாதிகளின் சலுகைகளைக் குறைக்கவும. எழுபது கழுதைகள் ஜெனிவா சென்றன. இரண்டுக்குத்தான் ஆங்கிலம் தெரியும். 2வது நெல்சன் மண்டேலா பிறந்து விட்டார்.
0 comments :
Post a Comment