இம்மாதம் 7ம் திகதியை தனியார்துறை ஊழியர்களுக்கும் விடுமுறையாக வழங்க கோரிக்கை
இம்மாதம் ஏழாம் திகதி அரச மற்றும் விசேட வங்கி விடுமுறையாக அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதையடுத்து, அவ்விடுமுறை யை அனைத்து கூட்டுத்தாப னங்கள்,அரசியலமைப்பு ரீதியாக நிறுவப்பட்ட சபைகள் மற்றும் தனியார்துறை ஊழியர்களுக்கும் வழங்குமாறு தொழில் உறவுகள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர் காமினி லொக்குக, இதன்பொருட்டு சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என நம்புவதாக கூறியுள்ளார்.
வெசாக் பௌர்ணமி தினம் சனிக்கிழமையாகவும் அதற்கடுத்து ஞாயிற்றுக்கிழமையாகவும் அமைந்துள்ளதால் இந்த விடுமுறை தினம் அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment