Sunday, May 27, 2012

75 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் எதிர்வரும் சனிக்கிழமை சமூகமயப்படுத்தப்படவுள்ளனர்

புனர்வாழ்வளிக்கப்பட்ட மேலும் 75 முன்னாள் எல்ரிரிஈ உறுப்பினர்கள் எதிர்வரும் சனிக்கிழமை சமூகமயப்படுத்தப்படவுள்ளனர். இவர்களுக்கு வாழ்வாதாரத்திற்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாக, புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

மனிதாபிமான நடவடிக்கையின் பின்னர் 12 ஆயிரம் பேர் அளவிலான எல்ரிரிஈ உறுப்பினர்கள், ராணுவத்தினரிடம் சரணடைந்தனர். அவர்களுள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டு, சமூகமயப்படுத்தப்பட்டுள்ளனர்.

அதேபோன்று ஒரு வருட புனர்வாழ்விற்குட்படுத்தப்பட்ட 75 பேர் , ஜூன் மாதம் 2 ஆம் திகதி வவுனியாவில் வைத்து சமூகமயப்படுத்தப்படவுள்ளனர். அவர்களுக்கு, முன்னர் சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்கும் வழங்கப்பட்ட சகல வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளன.

இவர்கள் சமூகமயப்படுத்தப்பட்டதன் பின்னர், தங்களது பெற்றோர், மனைவி, பிள்ளைகளுடன் சந்தோசமாக வாழ்க்கையை அனுபவிக்கும் அதே சந்தர்ப்பத்தில், நாட்டிற்கு சிறந்த பிரஜைகளாக அவர்கள் திகழ வேண்டுமென்ற நோக்கத்திலேயே, புனர்வாழ்வு நடவடிக்கைகள் அமைந்துள்ளன என புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் தர்சன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com