Thursday, May 17, 2012

75 மில்லியன் ஆண்டுகள் பழமையான டைனோசரின் எலும்புகள் ஏலத்தில்.

75 மில்லியன் ஆண்டுகள் பழமைவாய்ந்த டைனோசர் ஒன்றின் எலும்புகள், அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் எதிர்வரும் ஞாயிறன்று இடம்பெறவுள்ள ஏல விற்பனையில், ஏலத்தில் விடப்படவுள்ளதாக நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

கடந்த 7 வருடங்களுக்கு முன்னர், கோபி பாலைவனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடிப்படையாக வைத்து, குறித்த டைனோசர் எலும்புக்கூடு உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இந்த டைனோசர் ஷதிரனோசோரஸ் பா டார்| இனத்தை சேர்ந்தது எனவும் இந்த எலும்புக்கூடு, 7 அடி உயரத்தையும், 24 அடி நீளத்தையும் கொண்டதது என தெரிவிக்கப்படுpன்றது.

குறித்த டைனோசரின் எலும்புக்கூடு, 8 லட்சத்து 50 ஆயிரம் தொடக்கம் 24 லட்சம் டொலருக்கும் இடையில் விற்பனையாகலாமென, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment