70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் 185 மில்லிகிராம் ஹெரொயின் போதைப் பொருளை விற்பனை செய்த போது கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலை கருத்திற் கொண்டு மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது, ஹொரொயின் பாவனை செய்யும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்தப் பெண் இதற்கு முன் இரு தடைவை இது தொடர்பாக கைது செய்யப்பட்டு தண்டணை பெற்றவர் என குற்றத் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் இந்திரஜித் திசாநாயக தெரிவித்தார்.
சந்தேக நபரான இந்தப் பெண்ணின் 45 வயதுடைய மகனும் மற்றும் 42 வயதுடைய மகளும் இதற்கு முன் இரு சந்தர்ப்பங்களின் ஹெரொயின் வியாபாரம் செய்தபோது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர் எனவும் இவர்கள் நீண்ட காலமாக இந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இக்பால் அலி
No comments:
Post a Comment