வடமேல் மாகாணத்தில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதற்கு இந்த வருடத்திற்காக 70 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக வடமேல் மாகாண சுகாதார, சுதேச வைத்திய இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அசோக வடிவமங்காவ தெரிவித்தார்.
இந்த நிதி 49 வைத்தியசாலைகளுக்கும் மற்றும் 10 ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வைத்தியசாலைக்கு சிறந்து உணவு வகைகளை வழங்குவதற்காக கேள்விப் பத்திரத் தாக்கல் செய்யப்பட்டு தகுதிக்கேற்ப சிறந்த விநியோகஸ்தர்களைத் தெரிவு செய்து, போஷhக்கு மிக்க உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண சுகாதார அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment